ரஷியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டட்டர்ஸ்டான் குடியரசு எல்லக்குட்பட்ட சாலையில் நேற்றிரவு பயணிகளுடன் சென்ற ஒரு பஸ்சின் மீது எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு லாரி பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீபிடித்து எரிந்தன.
பின்னிரவு நேரம் என்பதால் இந்த விபத்து நிகழ்ந்தபோது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். பஸ் தீபிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள பஸ்சில் இருந்து கீழே குதித்தனர். இருப்பினும், தீயின் கோரபிடியில் சிக்கிய 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலை பாதுகாப்பு முறைக்கு வாகன ஓட்டிகள் சரியாக மதிப்பளிக்காததால் கடந்த ஆண்டில் மட்டும் இங்கு சாலை விபத்தில் 20 ஆயிரம் மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.