சவூதி, U.A.E , பஹ்ரைன் ஆகிய மூன்று நாட்டு மக்கள்/ நிறுவனங்கள், கட்டார் வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருந்த தங்களின் பணத்தை மீள பெற உள்ளதாகவும் இதன் மொத்த தொகை 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது கட்டாரின் மொத்த தேசிய உற்பத்தியில் இருபது வீதமான தொகையாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Bank of America-Merrill Lynch இதனை உறுதியும் செய்துள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள உள்ளூர் வங்கி முறை பெரும்பாலும் வெளிநாட்டு நாணயத்தை சார்ந்துள்ளது. சவூதி அரேபியாவில் 1.2 சதவீதமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 12 சதவீதமும் கொண்டதாக என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
இதேவேளை “குவைத் அமிர் விரும்பும் அவகாச நீட்டிப்பு, மதிப்பாய்வு என்பன கத்தாரின் ஒரு நல்ல முடிவுக்கான வாய்ப்பாக உள்ளது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம் என UAE வெளியுறவு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அன்வர் கர்காஸ் ட்வீட் செய்துள்ளார்.
அத்துடன் பதின்மூன்று விடயங்களில் சிலதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கட்டார் கூறுகின்றது, முக்கியமாக ஜெஸிரா மூடுவது, தீவிர வாதிகளுக்கு நிதியுதவி செய்றது என்ற குற்றச்சாட்டு , துருக்கி மிலிட்டரிய வெளியேற்றுவது என்பது இவைகளுக்கு கட்டார் உடன்படவில்லை.
இந்நிலையில் உலக கிண்ணத்துக்கு ஸ்டேடியம் கட்ட பொறுத்திருந்த சில நிறுவனங்கள் அதிலிருந்து விலகியும் விட்ட நிலையில், கட்டார் உடன்பட்டு போகணும் என்று ஜெர்மனும் தனது பங்குக்கு கருத்தை தெரிவித்துள்ளது.
அதேவேளை அத்தியாவசிய உணவுப்பொருட்கள் (அரிசி உட்பட) பல பொருட்களின் விலைகள் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் நிலைமை தொடர்ந்தால், குறைந்த வருமானம் பெறுபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் எண்ணத்தில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.khaleejtimes.com/region/qatar-crisis/funds-may-be-pulled-from-doha-banks