அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கென 2020ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையின் செலலுபடியாகும் காலம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் மொஹான் சமரநாயக்காவினால் கடந்த மே 17ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.