அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் புதன்கிழை இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், வியாழக்கிழமை பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் போது ஆண்டனி பிளிங்கன் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படுகிறது.