கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் பரவியதா என்பதை கண்டுபிடித்துத் தரும்படி அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
90 நாட்களுக்குள் இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
ஜோபைடனின் உத்தரவை கிண்டலடிக்கும் வகையில் சீனா கருத்து வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஷஹோ லிஜியன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அமெரிக்காவின் உளவுத்துறை வரலாறு பற்றி எங்களுக்கு தெரியும். சதாம் உசேன் காலத்தில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கூறியது. ஆனால் அங்கு ஒன்றுமே இல்லை என்பது போரின் முடிவுக்கு பிறகு தெரிய வந்தது’’ என்று கிண்டலாக கூறி உள்ளார்.