• Sun. Oct 12th, 2025

சுகமடைந்தார் சஜித் – மனைவியுடன் சென்று வழிபாடுகளிலும் பங்கேற்பு

Byadmin

Jun 11, 2021

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் கொழும்பில் உள்ள ஹுனுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் அவரது பாரியாரும் திரித்துவத்தின் ஆசீர்வாதங்களைப் பெறும் பெருட்டு கங்காராம விகாரைக்கு சமூகமளித்தனர். பேராசிரியர் அகலகட சிறிசுமன தேரர், நீதியாவெல பாலித தேரர், உங்கொட தம்மிந்தா தேரர்,கங்காராமை விகாரையின் அஸ்ஸஜி தேரர் ஆகியோர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்களால் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கும், சகல நாட்டு மக்களுக்காகவும் ஆசிர்வாதங்களை வழங்கியதோடு பிரித் அனுஷ்டானங்களையும் நிகழ்த்தினர். எதிர்க்கட்சித் தலைவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் தனது எதிர்கால முயற்சிகளுக்காக தமது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் இதன் போது மகா சங்கத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *