கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் றோஹித்த போகல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கருணாசேன எட்டியாராய்ச்சி தனது பதவியில் இருந்து விலகிய வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாணத்தின் ஆளுநரும் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியுமான ஒஸ்ரின் பெர்ணான்டோ இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதேவேளை முன்னாள் மேலதிக சொலிஸ்ரர் ஜனரலான கபில வைத்தியரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ருவிற்றர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.