எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால், ஆளும் கட்சிக்குள்ளேயே தற்போது பெரும் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இவ்வாறான ஒரு நேரத்தில் பஸில் ராஜபக்ஸ இருந்திருந்தால் எரிபொருளின் விலை அதிகரித்திருக்காது என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா கூறினார். இது எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான ஒரு வாய்ப்பு என்று நான் கூறவில்லை. பசில் ராஜபக்ஸ நேர்மையான மனிதர். எனவே அவர் இருந்திருந்தால், எரிபொருள் விலையை அதிகரிக்க அவர் அனுமதித்திருக்க மாட்டார் என்றார். எரிபொருள் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோலிய அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.