• Sat. Oct 11th, 2025

அனைத்துப் பொருட்களின் விலைகளையும், அதிகரிக்க அனுமதி கோரியுள்ளனர்

Byadmin

Jun 18, 2021

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இன்று -17- சதொச நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். 

உலகம் முழுவதும் விநியோக வலையமைப்பு மற்றும் உற்பத்தி செயன்முறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

கப்பல் கட்டணம் பாரியளவில அதிகரித்துள்ளது. கொள்கலன் கட்டணம் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உணவு உற்பத்தியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலையை குறைக்கக் கூடிய பொருட்களின் விலையை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் குறைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *