• Sat. Oct 11th, 2025

சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை: பிரதமர் தெரிவிப்பு

Byadmin

Jun 20, 2021

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை பாவனை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நெல் மற்றும் தேயிலை செய்கைக்கான உரம் நாட்டில் தற்போது காணப்படுவதாக அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உரத்தை சந்தையில் விநியோகிக்காமல், போலியான விதத்தில் உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேதனப் பசளையை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள செய்கைகளின் அனுகூலம் தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்,

சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் நாட்டிற்கு தௌிவுபடுத்தப்பட வேண்டுமல்லவா? விவசாயிகளை விரும்ப வைக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்து நாம் முன்னோக்கிச் செல்வோம். இதுவரை காலம் சமூகத்திலுள்ள நிபுணர்கள், கல்விமான்கள் ஆகியோர் இதனுடன் தொடர்புபடவில்லை. குறைவாகவே தொடர்புபட்டனர். அதன் பிரதிபலனையே நீங்கள் எதிர்கொண்டுள்ளீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *