• Sun. May 24th, 2026

சவூதியிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

Byadmin

Jul 4, 2017
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 21ம் திகதி முதல் ஜூன் 25ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த காலப் பகுதியில் 4 ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தொழில் கால ஒப்பந்தம் முடிவடைந்து சவுதியில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 23ம் திகதி நாடு திரும்ப கால அவகாசம் உள்ளது.
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *