• Sat. Oct 11th, 2025

அன்று முஹம்மது நபி (ஸல்) தடுத்ததும், இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பும்..!

Byadmin

Jul 4, 2017
நின்று கொண்டு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அது ஒரு குற்றம் என்று யாரும் கருதுவதில்லை. ஆனால் அதில் உள்ள பாதிப்பை யாரும் உணர்வதில்லை.
இன்றைய விஞ்ஞானம் இதைப் பற்றி ஆய்வு செய்தது. நின்று கொண்டு நடந்து கொண்டோ குடித்தால் முதலில் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறைந்து விடுமாம்.
பிறகு என்ன ஆகும்? சிறுநீரகங்களில் அல்லது சிறுநீர்ப்பையில் அல்லது இரத்தத்தில் வடிக்கப் படாத நச்சுக்கள் அப்படியே தங்கி அந்த உறுப்புகளின் உள்ளே அவை தொடர்பான நோய்களை உற்பத்தித்து பிறகு அதிகரிக்கச் செய்யும்.
ஆனால் உட்கார்ந்து குடித்தால் குடித்த நீரானது உடலின் எல்லா இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சென்று சிறுநீரகங்களில் சேர்த்து அங்கிருந்து முறையாக வெளியேற்றும்.
யார் எங்கே நின்று கொண்டு குடித்தாலும் உணவு உண்ட பின் உட்கார்ந்து தானே குடிக்கிறார்கள்! ஆமாம். அந்த சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்கிறது. காரணம் இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த சிஸ்டம்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்களிலிருந்து இனிமேற்கொண்டு யாரும் நின்று கொண்டு நீர் அருந்த வேண்டாம். மறந்து அப்படி அருந்தினால் பின்னர் செய்வதற்கு அஞ்சிக் கொள்ளட்டும்.”
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் நின்று கொண்டு நீர் பருகியதைத் தடுத்தார்கள். அதே அனஸ் ரளியல்லாஹு அன்ஹு மிக மிக பிந்திய காலத்தவர் தான். நபிகளாருக்கு அவர்கள் வீட்டிலேயே ஊழியஞ்செய்யத் தாயாரால் விடப்பட்டவர்கள்.
அந்த அனஸ் அவர்கள் இன்னொரு அறிவிப்பிலே சொல்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டு நீர் சுரப்பும் பழக்கத்தைத் திரும்பப் பெற்றார்கள். நாங்கள் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு இடம் கேட்டோம்: “நின்று கொண்டு உண்ணுவது?” அனஸ் சொன்னார்: “அது, மிக மிகத் தீங்கு மட்டுமல்ல: மிக மிக அசிங்கம்.” (அதுவுந்தான் தடுக்கப்பட்டது)
ஆனால் ஜம் ஜம் நீரை நின்று கொண்டு தான் அருந்தினார்கள். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (நின்று கொண்டு குடிப்பதை வாபஸ் வாங்கியதற்குப் பின்னால்) நான் ஜம் ஜமிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புகட்டினேன். அவர்கள் அதை நின்று கொண்டு அருந்தினார்கள் (இமாம்கள் இருவர் கருத்தொருமித்தது.)
இந்தக் காலத்தில் எல்லோருக்கும் மூட்டு வலி வருகிறது தெரியுமா? நின்று கொண்டு நீர் அருந்துவது ஒரு முக்கியக்க காரணமாக உள்ளது. மூட்டுக்களிலுள்ள கிண்ணங்களிலுள்ள நீர்ச் சக்தியைக் குறைந்து விடச் செய்கிறது. நீண்ட காலம் தொடர்ந்து நின்று கொண்டு நீர் அருந்தினால் மூட்டுக்களில் நீர்மச் சத்து காய்ந்து ஆர்த்திரிடீசை உண்டாக்குகிறது.
பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது (குடிக்கும்போதல்ல) சிம்பதடிக் (சிந்தெடிக்) நரம்பு மண்டலம் செயல் பட ஆரம்பிப்பதால் நரம்புத் துடிப்பு அதிகமாகும். இரத்த நாளங்கள் விரியும். நரம்புகள் அதிகமாகப் பதட்டம் பெறும். கல்லீரலிலிருந்து சர்க்கரை வெளிப்படுவதும் அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்புடன் இயங்கும். அந்த நிலையில் நீர் அருந்தினால் நேரடியாகச் சிறுநீர்ப்பையை அடைந்து வெளிஏற்றம் பெறும். உடலின் எல்லாப் பாகங் களுக்குஞ் செல்ல வேண்டுமல்லவா? அது நடக்காது. நேரடிச் சிறுநீர்ப்பை. நேரடி வெளியேற்றம்.
ஆனால் உட்கார்ந்து கொண்டு நீர் பருகினால், பாராசிம்பதடிக் நரம்பு மண்டலம் செயல் பட ஆரம்பித்து உடல் தளர்வாகி செயல்பாடுகளின் வேகம் குறைந்து நரம்புகள் அமைதியாகி உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் மெதுவாகச் செரி மண்டலம் சென்று செரிமானம் ஆகி பிறகு அங்கிருந்து நீர் மட்டும் வடிகட்டப்பட்டு சிறுநீரகம் செலுத்தி முறையாக வெளியேற்றும்.
உலகத்தவருக்கு இந்த விளக்கமெல்லாம் தேவை இல்லாமலே உட்கார்ந்து அருந்தும் பழக்கம் தானாகவே ஏற்பட்டிருப்பது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை தங்களுடைய நடை முறை என்று ஏற்றுக் கொண்ட பின்னாற்றான்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவை எவை எல்லாம் என் ஸுன்னத் என்று சொன்னார்களோ அவை அத்தனையும் எல்லா மக்களிடமும் பழக்கமாகப் போய்ச் சேர்ந்துள்ளது.
“அன்நிக்காஹு மின் ஸுன்னத்தீ” என்று எப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களோ அப்போதிருந்து இப்போது வரை திருமணம் எல்லோராலும் நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது. நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதும் அதே கதைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *