சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதல் ஓமிக்ரான் கேஸ் பதிவானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு கடிதம் ஒன்றின் மூலம் ஓமிக்ரான் வகை கொரோனா நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா பரவல் தொடங்கி இருந்தால் அங்கு இதுவரை 1 லட்சம் கேஸ்கள் கூட பதிவாகவில்லை. அங்கு கொரோனாவிற்கு எதிராக மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஒருவர், இருவருக்கு கொரோனா வந்தாலே பெரிய நகரத்தையே மூடும் அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஜீரோ கோவிட் எனப்படும் கட்டுப்பாடுகள் சீனாவில் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா கேஸ் 1 பதிவானால் கூட அங்கு கடுமையான லாக்டவுன் விதிகள் அமலுக்கு வரும். இதனால்தான் சீனாவில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் உயராமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா சீனா ஆனால் இந்த கட்டுப்பாடுகளை மீறி சீனாவில் ஓமிக்ரான் வைரஸ் நுழைந்துள்ளது. அங்கு பெய்ஜிங்கில் ஓமிக்ரான் கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட அந்த நபரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி சோதனை செய்துள்ளனர். அவரை தனிமைப்படுத்தி, அவருடன் கடந்த 14 நாட்களாக பழைய எல்லோரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதில் அவருடன் நெருக்கமாக இருந்த யாருக்கும் கொரோனா இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா ஓமிக்ரான் அதாவது அவரை தொடர்பு கொண்ட யாருக்கும் கொரோனா இல்லை. ஆனாலும் வெளிநாடு செல்லாத அந்த நபருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி என்று சோதனை செய்துள்ளனர். இதனால் அவருக்கு வந்த பார்சல் எதிலாவது ஓமிக்ரான் இருந்திருக்குமா என்று சோதனை செய்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த நபருக்கு கனடாவில் இருந்து கடந்த வாரம் லெட்டர் ஒன்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் உறவினரிடம் இருந்து லெட்டர் வந்துள்ளது. அமெரிக்கா கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இந்த லெட்டர் சீன நபருக்கு வந்துள்ளது. இந்த லெட்டரை சோதனை செய்ததில் அதில் ஓமிக்ரான் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் பெய்ஜிங்கில் முதல் ஓமிக்ரான் கேஸ் பதிவாகி இருக்கலாம் என்று அந்நாட்டு சிடிசி அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த விமானத்தில் வந்த மற்ற பார்சல்கள் எல்லாம் சோதனை செய்யப்பட்டது. பார்சல் சோதனை அந்த விமானத்தில் வந்த பார்சல்களில் 6 லெட்டரில் இதேபோல் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு பார்சலின் வெளிப்பக்க உரையில் கொரோனா இருந்துள்ளது. பொதுவாக பொது இடங்களில் கொரோனா நீண்ட நாட்கள் இருக்காது. நீண்ட நேரம் கொரோனா தாக்குபிடிக்காது. அதேபோல் கடிதம் போன்ற பார்சல்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டதும் கிருமி நாசினி போட்டு சுத்தப்படுத்தப்படும். Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil எப்படி வந்தது? ஆனால் அதையும் மீறி இந்த லெட்டரில் கொரோனா வந்துள்ளது. அதுவும் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வந்துள்ளது. ஓமிக்ரான் மிக வேகமாக பரவும் திறன் கொண்டதாக உள்ளது. ஒருவேளை இதன் காரணமாக ஓமிக்ரான் கொரோனா லெட்டரில் பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த லெட்டரை கையாண்ட விமான நிலைய அதிகாரிகள், நிர்வாகிகளிடம் அந்நாட்டு அரசு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.