• Tue. Apr 7th, 2026

10 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை இலங்கை மின்சார சபைக்கு வழங்க தீர்மானம்

Byadmin

Jan 19, 2022

எதிர்வரும் 8 தினங்களுக்கு மின் உற்பத்திக்கு தேவையான 10 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை இன்றைய தினம் மின்சார சபைக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வாராந்திர அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

நேற்று மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அமெரிக்க டொலர்கள் மூலம் இரண்டு கப்பல்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளாந்த மின் உற்பத்திக்கு 1500 மெற்றிக் தொன் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக நேற்று கொண்டுவரப்பட்ட ஒரு தொகை டீசலில் 10 ஆயிரம் மெற்றிக் தொன்னை மின்சார சபைக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *