அமெரிக்கா சென்றுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் குழு கூட்டத்தில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி சனிக்கிழமை நாடு திரும்ப உள்ள நிலையில் அவரது உடல் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.