உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் டெஸ்லா இலத்திரனியல் கார் தொழிற்சாலையை இலங்கையில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அது முடியவில்லை என்றும், எலோன் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தி வாய்ப்பைப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது தந்தை இருந்திருந்தால் அதனை தாம் செய்திருப்பேன் என மேலும் தெரிவித்த சஜித் பிரேமதாச, தனது தந்தை 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.