நாட்டுக்கு தேவையான மூன்றாம் கட்ட தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளும் முழுமையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய அஸ்ட்ரசெனிகா, சைனோபார்ம், ஸ்புட்னிக், மொடர்னா மற்றும் பைசர் ஆகியவை உள்ளடங்களாக 85 இலட்சத்து 60 000 தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.