வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் டொலர்களுக்கு 240 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை இலட்சம் பேரை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பினாலும் அரசாங்கம் எதிர்பார்க்கும் டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக மூன்று இலட்சம் பேரை அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
டொலரின் பெறுமதி கறுப்புச்சந்தையில் 240 ரூபா தொடக்கம் 245 ரூபாவரை இருக்கும்போது, டொலர் ஒன்றுக்கு 203 ரூபாவுக்கு யார் இங்கு பணம் அனுப்பப்போகின்றார்கள்.? அதனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பம் டொலர்களுக்கு குறைந்தபட்சம் 240 ரூபா டொலர் ஒன்றுக்கு வழங்க வேண்டும் என நான் அமைச்சரவைக்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.