டிஜிட்டல் தேசிய அடையாளஅட்டை வழங்கப்பட்டதன்பின்னர், அனைத்து பிரஜைகளுக்கும்டிஜிட்டல் வலட் (டிஜிட்டல் பை)அறிமுகப்படுத்தப்படும் என இளைஞர்மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்கள்,திருமணச் சான்றிதழ்கள், பரீட்சைச்சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசியதனிப்பட்ட ஆவணங்களை தங்கள்திறன்பேசியிலுள்ள டிஜிட்டல்வலட்டில் வைத்து எந்த நேரத்திலும்சமர்ப்பிக்க அனைத்து குடிமக்களுக்கும்அனுமதியளிக்கப்படும் என்று கூறினார.
இத்திட்டம் 30 மாதங்களுக்குள்நிறைவடையும் எனஎதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர்சுட்டிக்காட்டினார். Mobile phone மூலம்பணம் செலுத்துவதற்காக மத்தியவங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட லங்காQr குறியீட்டை, கம்பஹாவில் நேற்றுமுன்தினம் அறிமுகப்படுத்தும் நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்ட விடயத்தை அவர்தெரிவித்தார்.
தற்போது, லங்கா QR குறியீடுசெலுத்தும் திட்டம் நாட்டின் 13 முக்கியநகரங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
சுற்றுலாத்துறைக்கும் லங்காQR குறியீட்டை அறிமுகப்படுத்தகவனம் செலுத்தப்பட்டு வருவதாகசுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னரணதுங்க, நிகழ்வில் உரையாற்றி போதுதெரிவித்தார்.
இது தொடர்பாகசம்பந்தப்பட்ட பிரிவுகளுடன்கலந்தாலோசித்து அடுத்தகட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.