• Sat. Apr 4th, 2026

பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு புதிய கட்டண முறை இந்த வாரத்தில் இருந்தே நடைமுறை ஆகும்.

Byadmin

Jan 25, 2022

பஸ்களில் நின்றுகொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படஉள்ளது.
புதிய திட்டம் பெரும்பாலும் இந்தவாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பஸ் போக்குவரத்து சேவைகள்இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமதெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவல்காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பபயணிகளை ஏற்றிச்செல்லும் விதி, பலபஸ்களில் மீறப்படுவதாக கூறினார்.

இந்த விதிமீறல்கள்தொடர்பில் கடந்தவாரம் பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம்அறிவித்துள்ளதாக தெரிவித்தஇராஜாங்க அமைச்சர்அமுனுகம, தடையைமீறும் பஸ் நடத்துனர்களைகைது செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகதெரிவித்தார்.

எனினும், கைதுசெய்யப்பட்டாலும்,கிராமப்புறங்களில்அத்துமீறல் தொடர்ந்துநடைபெற்று வருகிறதுஎன்றார்.

இந்த நடவடிக்கைநிறுத்தப்படாவிட்டால் இந்த வாரத்தில், ஆசனங்களில்அமராத பயணிகளுக்கானபஸ் கட்டணத்தைநடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயம்ஏற்படும் என இராஜாங்கஅமைச்சர் எச்சரித்துள்ளார்.

தொற்றுநோய் காரணமாகபஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு பஸ்உரிமையாளர்களின்கோரிக்கைகளை தாங்கள்நிறைவேற்றியதாகவும்,எனவே, அரசாங்கம்விதித்துள்ள கட்டுப்பாடுகளைஅவர்கள் கடைப்பிடிப்பதுநியாயமானதுஎன்றும் அமுனுகமசுட்டிக்காட்டினார்.

மேலும், கட்டுப்பாடுகள்தொடர்ந்து மீறப்படும்பட்சத்தில், அமராதபயணிகளுக்கும், அமர்ந்துபயணிக்கும் பயணிகளுக்குஎன தனி பஸ் பயணக்கட்டணத்தை அதிகாரிகள்அறிமுகப்படுத்துவார்கள்என்றும் அவர் கூறினார்.

தற்போதையநிலைமையை மதிப்பீடுசெய்து இந்த வாரத்துக்குள்இந்த புதிய திட்டம்அறிமுகப்படுத்தப்படும்என இராஜாங்க அமைச்சர்அமுனுகம மேலும்தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *