நாட்டில் தற்போது இனங் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அறிகுறிகள் அற்ற அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகத் தெரிவித்த அவர்,
அவர்களில் அதிகமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாடு தொற்றியவர்கள் என்று குறிப்பிட்டார்.
அவர்களில் டெல்டா மாறுபாட்டையும் கொண்டவர்கள் இருக்கக்கூடும் என்பதை மறக்கக்கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில், நாளாந்தம் 800 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் தற்போதைய சூழ்நிலை மிக ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டினார்.
தாம் செல்கின்ற பிரதேசங்களில் குறைந்தபட்சம் ஒருவரேனும் கொரோனா தொற்றுடன் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.