அநுராதபுரம் – கல்னேவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அவுக்கண பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 44,43 மற்றும் 36 வயதுடைய அவுக்கண பெம்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென தெரிவித்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.