• Wed. Jun 10th, 2026

சமுர்த்தி பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி

Byadmin

Feb 13, 2022

சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்தி கொடுப்பனவினை நூற்றுக்கு 28 சதவீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய கொடுப்பனவு அதிகரிப்பு நாளை முதல் அமுல்படுத்தப்படும் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடுதழுவிய ரீதியில் 17,67000 சமுர்த்தி பயனாளர்கள் உள்ளார்கள்.சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கும் மாத கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சமுர்த்தி பயனாளர்கள் குறித்து சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் உள்ளடக்கம் முழுமைப்படுத்தப்படும்.

அதற்கமைய 3500 ரூபாவாக காணப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு நாளை முதல் 4500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.அத்துடன் 2500 ரூபாவை பெற்றுக்கொண்ட பயனாளர்களுக்கு 3200 ரூபாவும்,1500 ரூபாவை பெற்றுக் கொண்ட பயனாளர்களுக்கு 1900 ரூபாவும் இனி வழங்கப்படும்.

அதற்கமைய 2022ஆம் ஆண்டு வரவு –செலவு திட்டத்திற்கமைய சமுர்த்தி பயனாளர்களுக்கென 50,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய அதிகரிப்பினால் மேலதிகமாக 15000 மில்லியன் செலவிடப்படவுள்ளது.அதற்கமை இவ்வருடத்தில் மாத்திரம் சமுர்த்தி பயனாளர்களுக்காக 65,000 மில்லியன் நிதி செலவிடப்படவுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் 25சதவீத வரி அறவிடல் ஊடாக அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தவுள்ளதாக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *