பொலன்னறுவை – அரலகங்வில பொலிஸ்பிரிவுக்குட்பட்ட எல்லேவௌ பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்லேவௌ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அரலகங்வில பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.