இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையில் பணிப்பாளர் யூ. எல் யாகூப்பினால் வாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.00- 12 மணி வரை சமகால அரசியல் தொடர்பாக நடத்தப்படும் வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியில் இன்று முஸ்லிம் சமயம் விவகாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கலந்தரையாடலில் நாட்டின் தற்போதைய அரசியல் சமூக சூழ்நிலை பற்றியும் ஹஜ் விவகாரம் சைட்டம் உள்ளிட்ட முக்கியம் அம்சங்கள் கலந்தரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்பால் அலி