உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பில் பெலாரஸில் ரஷ்ய – உக்ரைன் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேச்சுவரத்தை பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷ்யா இணங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷியாவை இறங்கி வரச்செய்துள்ளது. பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டு குழுவினரும் பெலாரஸ் வருகை தந்தனர்.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீது 5 ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று போர் முடிவுக்கு வருமா என் எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது
ரஷ்ய – உக்ரைன் இடையில் சமாதான பேச்சுவரத்தை ஆரம்பமானது.
