மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசியத்தகவலுக்கமைய கோனவில களனி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வாகனங்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் 22 26 வயதுடைய வேயங்கொட மற்றும் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களிடமிருந்து 2 முச்சக்கரவண்டிகளுடன் மோட்டார்சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்கள் இன்றைய தினம் மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.