இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும்,கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 117 வயதில் காலமானார்.
1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்குரஸ்ஸ, அத்துரலிய பிரதேசத்தில் பிறந்த அவர் இமதுவ – கனங்கே கனங்கேவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தில் கௌரவிக்கப்பட்ட டிங்கி ஹாமி, 117 ஆண்டுகள் வாழும் அரிய பாக்கியத்தை பெற்றிருந்தார்.
டிங்கி ஹாமியின் பூதவுடல் கனங்கேவத்தை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது இறுதிக்கிரியை நாளை பிற்பகல் அவர்களின் குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இன்று காலமானார்.
