• Sun. Oct 12th, 2025

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்கள் சந்திப்பு

Byadmin

Jul 7, 2017
தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பொன்றை சர்வமத பிரதிநிதிகள் மேற்கொண்டனர்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியா­ழக்­கி­ழமை (06) இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகாலத்தில் தோன்றியுள்ள இன ரீதியான முறுகல் நிலையை கட்டுப்படுத்துவதும், தேசிய ரீதியில் சகவாழ்வினை உறுதிசெய்வதும் இதற்காக  அரசியல் வாதிகளும், மதத்தலைவர்களும் இணைந்து தேசிய ஒற்றுமைக்காக புரிந்துணர்வுடன் எவ்வாறு செயற்படுவது என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கட்சிகளின் சார்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,  அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பாராளுமன்ற உறுப்பினர்களான டக்லஸ் தேவா­னந்தா, சுமந்திரன் ஆகியோர் கலந்­து­கொண்­ட­னர்.
சர்வமத பிரதிநிதிகள் சார்பில் முஸ்லிம்கள் சார்பில் எஸ்.எம். ஆதம்பாவா மௌலவி, பஸீல் பாரூக், எஸ். தாசிம் ஆகியோரும் கிறிஸ்தவர்கள் சார்பில் அருட்தந்தை ஒஷ்வால்ட் ஹோம்ஸ், வனபிதா க்ளிடஸ் சந்ரசிறி பெரேரா, அருட்தந்தை மேர்வின் பெர்னாண்டோ, அருட்தந்தை நோயல் பெர்னாண்டோ ஆகியோரும், பௌத்த மதம் சார்பில் இத்தபானே தம்மாலங்கார தேரர், பெல்லன்வில விமலரத்ன தேரர், நீதியாவேல பாலித தேரர், பானகல உபதிஸ்ஸ,வல்பொல விமலஞான தேரர், ஹொரவல தம்மபோனி தேரர் ஆகியோரும் இந்துக்கள் சார்பில் வைத்திய ஸ்ரீ கே.வி.கே. குருக்கள் சிவராஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-Firows Mohamed –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *