கதிஜா பவுண்டேசன் தலைவா் எம். முஹம்மத் (என்.எம் ரவல்ஸ்) மகரகம கென்சா் புற்றுநோய் வைத்தியசாலைக்கு 20 கோடி ருபாவுக்கு ஒரு பெட் ஸ்கனா் மெசினை பெற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கென்சா் பைட் டீமீன் வருடாந்த ஒன்று கூடல் நேற்று முன்தினம் (6) கொள்ளுப்பிட்டியில் உள்ள ்கோட்டலில் நடைபெற்றது. இந் சங்கத்தில் உள்ள புற்றுநோய் வைத்தியா்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனா். சிங்கப்புரில் இருந்து வந்த வைத்திய நிபுணா் டொக்டா் குருப்பால் சிங்கினால் எழும்பு மற்றும் புற்றுநோய் பற்றிய விரிவுரை ஒன்றும் நடாத்தப்பட்டது.
இவ் அமைப்பினாரால் பெட் ஸகணா் மெசின் கொள்வனவுக்காக 25 கோடி ருபா சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மகரகம புற்றுநோய் வைத்தியா்களும் கலந்து கொண்டனா்.

-அஷ்ரப் ஏ சமத் –