• Sat. Oct 11th, 2025

இப்தார் உரையை முடிக்கும் போது கண்கலங்கிய எர்தூகான்

Byadmin

Apr 28, 2022

துருக்கி அதிபர் ரஜப் தையூப் எர்தூகான் அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் இஃப்தார் விருந்தில் ஆற்றிய உரை அடுத்த தலைமுறையை குறித்த அவரது தொலைநோக்கு பார்வை வெளிப்பட்டது..

“கல்வி, வேலைவாய்ப்பு, நீதி, பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளில் தேசத்தை உயர்த்துவதாக அதிபர் பதவியேற்கும் போது நாட்டு மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றிய திருப்தியுடன் 

உங்கள் முன் நிற்கிறேன்..

துருக்கியில் பல்கலைக்கழகம் எண்ணிக்கை 78 லிருந்து 207 ஆக உயர்த்தியுள்ளோம்.

பல்துறை சார்ந்த கல்வி நிபுணர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்திலிருந்து

1.82 லட்சமாக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் சென்று உயர்படிப்பு பயில விரும்பும் துருக்கி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

இளநிலை படிப்பில் 850 பேரும், முதுகலை படிப்பில் 1700 பேரும், முதுகலை ஆராய்ச்சி படிப்பில் 2550 பேரும் வெளிநாட்டில் பயில்பவர்களுக்கு 750 டிரில்லியன் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2022 ம் ஆண்டு உள்ளூரிலும், அயல் நாடுகளிலும் உதவித்தொகை பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 13 லட்சம் ஆகும்..

துருக்கி முழுவதும் 81 மாகாணங்களில் 390 இளைஞர் மையங்கள், 43 இளைஞர் திறன் மேம்பாடு தங்கும் முகாம்கள் அமைத்துள்ளோம்.

துருக்கி முழுவதும் 4126 விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைத்துள்ளோம். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை 2,78,000 விருந்து 11 லட்சமாக உயர்ந்துள்ளது..

எங்கள் தேசத்தின் குழந்தைகளுக்கு வலுவான மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு உயிரூட்டக்கூடிய  துருக்கியை கட்டமைத்திடவும்

“துருக்கி 2053” எனும் தொலைநோக்கு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

நமது காலத்திற்கு பிறகு நாம் விட்டு செல்லும் இடத்திலிருந்து இளைய தலைமுறையினர் துருக்கியை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது..

இறைவனுக்கே புகழனைத்தும்””

என்று இஃப்தார் உரையை முடித்த அதிபர் எர்தூகான் கண்கள் கலங்கியிருந்தது

Colachel Azheem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *