டுவிட்டர் நிறுவனத்தை கைவசப்படுத்தியுள்ள எலான் மஸ்க் அடுத்தடுத்து அதிரடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மாஸ்க் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். முதலில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய அவர், டுவிட்டர் சமூக வலைதளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.