• Mon. May 4th, 2026

O/L பரீட்சை இடம்பெறும் திகதி குறித்த அறிப்பு

Byadmin

May 11, 2022

க.பொ.த சாதாரணதர பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று பரீட்சைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான நேர அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *