அங்கீகரிக்கப்பட்ட பல வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 380 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 374 ரூபா 99 சதமாகவே காணப்படுகின்ற நிலையில், அதன் கொள்முதல் விலை 361 ரூபா 72 சதமாக காணப்படுகிறது.