• Mon. May 4th, 2026

பிரதமர் ரணிலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது : ரஞ்சித் மத்தும பண்டார

Byadmin

May 13, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் மீண்டும் இம்தியஸ் பாகீர் மாக்கரை பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கலந்துரையாடல் இன்று (13) காலை 10.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *