நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளினதும்முதலாம் தவணைக் காலம் இன்று வியாழக்கிழமையுடன் (19) முடிவடைந்துள்ளது,
நாளை வெள்ளிக்கிழமை (20) முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது,
முதலாம் தவணைக் காலம் நாளை வெள்ளிக்கிழமை முடிவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய வெள்ளிக்கிழமை (20) ஆரம்பமாகும் முதலாம் தவணை விடுமுறை எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதியுடன் நிறைவடையும். ஜூன் 6 ஆம் தினதி முதல் இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதே வேளை எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இப்பரீட்சைகள் ஜூன் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.