• Sat. May 2nd, 2026

வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பும் தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்க யோசனை.

Byadmin

May 23, 2022


வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பும் தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்க யோசனை.

Madawala News May 23, 2022

இலங்கைக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்குவாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை அனுப்புவோருக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு முன்மொழிவதாக அமைச்சர் கூறினார்.
இதற்கான பிரேரணையை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு ஊக்குவிப்பதற்காக மேலும் பல வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *