• Sat. Oct 11th, 2025

ஆயிஷா கொலை – சாணாக்கியன் Mp, நாமல் Mp ஆகியோரின் குமுறல்கள்

Byadmin

May 29, 2022

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா அவர்களுக்கு எனது அழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள். மனம் கனக்கின்றது. உங்களையும் எங்கள் நாட்டின் வருங்கால சந்ததியையும் பாதுகாக்க நாங்கள் தவறிவிட்டோம். இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு சம்பந்தப்படவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அவர்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இவ் அரசாங்கம்  சிறிய மற்றும் அற்பமான தொகையே வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய சிறுவர்களே நாளைய எமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும். 

2

உயிரிழந்த அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் குடும்பத்தினருக்கும், அவரின் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

தனது டுவிட்டர்  தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். 

மேலும்,  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அல்லது துஷ்பிரயோகம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *