துருக்கி தமது நாட்டின் பெயரை துருக்கியே என மாற்றியுள்ளது.
அங்காராவின் கோரிக்கைக்கு அமைய, ஐக்கிய நாடுகள் சபை இதனை அங்கீகரித்து உறுதிப்படுத்தியுள்ளது.
துருக்கிய மக்களின் கலாசாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடாக துருக்கியே உள்ளதென அந்த நாட்டு ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகான் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.