• Tue. Oct 14th, 2025

வெளிநாட்டு பணத்துடன் விமான நிலையத்தில் இந்தியர் கைது

Byadmin

Jun 5, 2022

சட்ட விரோதமான வெளிநாட்டு நானயங்களை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லவந்த இந்தியரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பும் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டு சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இன்று 5ம் திகதி அதிகாலை 3.30 மணிக்கு ஈ 1208 இலக்க இந்தியன் எயர் லைன் விமானத்தில் பயணிக்க வந்த இந்தியாவைச் சேர்ந்த பயணியை விமானநிலைய பாதுகாப்புத் தரப்பினர் பரிசோதித்த போது அவரிடம் சட்ட விரோதமான எடுத்துச் செல்ல இருந்த வெளிநாட்டு நானயத் தாள்கள் கைப்பற்றப்பட்டன.

இவரிடம் கணேடியன் டொலர் 1இலட்சத்து 17 ஆயிரம், யூரோ 19 ஆயிரம் கைபற்றப்பட்டன.

மேலதிக விசாரணைக்காக சநதேகநபர் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *