உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தங்கொட்டுவ போசலின் நிறுவன ஊழியர்கள் இன்று 5ம் திகதி நீர்கொழும்பு கடற்கரையை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் வினோப செனவிரத்ன,ஒருங்கிணைப்பு அதிகாரி சன்ன குணரத்ன தலைமையில் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜிஹான் பிரனாந்து, பிரதான பொது சுகாதார பரிசோதகர் எச்.ஏ.யூ.கே.குணரத்ன ஆகியோரும் பங்கேற்றனர்.