தமது சங்கத்தின் பேருந்து சேவைகள் இன்று (28) இயங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இன்று 28 முதல் 13 நாட்களுக்கு தனியார் வாகனங்களுக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலம் எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.