• Wed. Jun 10th, 2026

எரிபொருள் விநியோகிக்க டோக்கன் – நாளைமுதல் அறிமுகம்

Byadmin

Jun 26, 2022

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்க டோக்கன் முறை நாளை (27) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்த எரிபொருள் கப்பல் வரும் திகதியை தற்போது கூற முடியாது என்றார்.

கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது வரிசையில் நிற்கின்றவர்களுக்கே இந்த டோக்கன் வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

அந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு எரிபொருள் வந்ததன் பின்னர், ஏற்கெனவே டோக்கன் வழங்கப்படுபவர்கள் அழைக்கப்படுவர்கள்.

அவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டதன் பின்னர், வரிசையில் எஞ்சியிருப்போருக்கு டோக்கன் வழங்கப்படும்.

இதேவேளை, பெயர்களை பதிந்துகொண்டு எரிபொருள் வழங்கும் நடைமுறை தற்போதைக்கு அமுல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *