• Mon. Apr 6th, 2026

அரச ஊழியர்களும், கல்வி துறையினரும் 2 வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி

Byadmin

Jun 18, 2022

அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது.

அதற்கமைய, அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு இணையம் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலம் இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.

எனினும், அத்தியாவசிய சேவைகள் வழமைபோல இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *