வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டடத்தில்
தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையின் ஆறாம் வகுப்பு கட்டடத்தின் மீது அருகில் உள்ள காணி ஒன்றில் இருந்த மரம் ஒன்று இன்று காலை பாடசாலை கட்டடத்தின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது காயமடைந்த 10 மாணவர்கள் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.