• Tue. Apr 7th, 2026

எதிர்வரும் நாட்களில் கடைகளில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ; இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

Byadmin

Jun 15, 2022

எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியின் போது இதுவரை பயன்படுத்தப்பட்ட திறந்த கணக்கு அடிப்படையிலான முறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

அந்த முறைமை நிறுத்தப்பட்டதன் மூலம் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது டொலர் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *