• Sun. Oct 12th, 2025

ஆரோக்கியமான சருமத்திற்கு தயிர் போதும்!

Byadmin

Sep 7, 2025 ,

தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வெளிப்புற தோலை பாதுகாக்கவும் துணை புரிகிறது என்பது தான் ஆச்சரிய செய்தி. சிலருக்கு தயிரின் சுவை பிடிக்காமல் தயிர் சாப்பிடுவதையே தவிர்த்துவிடுவார்கள். நியூட்ரிசியன்கள் நிறைந்த தயிரை நம் தோலில் அப்ளை செய்வதால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

100 கிராம் அளவுள்ள தயிரில் 1 மில்லி கிராம் ஜிங்க் இருக்கிறது. ஆஸ்ட்ரிஜண்ட் போல செயல்படும் இதனால் நம் உடலில் உள்ள செல்களின் இனப்பெருக்கத்திற்கும், நம் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் சுரப்பிகளின் வளர்சிக்கும் காரணமாய் இருக்கிறது. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வருவது தவிர்க்கப்படும்.

சருமத்தின் மேல் பகுதியில் உள்ள எபிடர்மிஸில் கால்சியம் சத்துக்களே நிறைய இருக்கும். அங்கு கால்சியம் சத்து நிறைந்த தயிரை தடவுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். அதே நேரத்தில் சரும வறட்சியிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தயிரில் உள்ள ரிபோஃப்லாவின்(riboflavin)எனப்படும் விட்டமின் பி2 சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கச்செய்கிறது. அதோடு, நம் சருமத்தின் அடிப்படையான செல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

சருமத்திற்கான அழகு சாதன பொருட்களில் இடம் பெறும் முக்கியப் பொருள் லேட்டிக் ஆசிட். இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படும். அதோடு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *