நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால்,
வெள்ளிக்கிழமை (17) தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன,
அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என்றார்.
“20% தனியார் பேருந்துகள் (4,000 பேருந்துகள்) நாளை (15) மற்றும் வியாழன் (16) ஆகிய இரு தினங்களில், கையில் இருக்கும் எரிபொருளைக் கொண்டு நாடு முழுவதும் சாலைகளில் இறங்கும், அதன் பிறகு இயக்கம் 3,000 ஆக மட்டுப்படுத்தப்படும். வெள்ளிக்கிழமைக்குள் நாங்கள் பஸ்களை சாலைகளில் கொண்டு செல்ல முடியாது,” என்றார்.