• Wed. Apr 8th, 2026

அடுத்த 3 மாதங்களுக்கு, வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி

Byadmin

Jun 14, 2022

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை

வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) முதல் குறித்த விடுமுறை அமுலுக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம், பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவன ஊழியர்களை தவிர ஏனைய அரச ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *