• Sun. Oct 12th, 2025

கிராம அலுவலர்களுக்கு கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Byadmin

Jul 11, 2017

பொலன்னறுவை மாவட்ட கிராம அலுவலர்களுக்கு டெப் கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்றது.

தொலைதொடர்புகள், டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலில் ”திறன் சமூக வட்டம்” செயற்திட்டத்தின் கீழ் இந்த டெப் கணனிகள் வழங்கப்படுகின்றன. அதனை குறிக்குமுகமாக தமன்கடுவ, திம்புலாகல மற்றும் ஹிங்கிராக்கொட பிரதேச செயலக பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் சிலருக்கு ஜனாதிபதி அவர்களால் டெப் கணனிகள் வழங்கப்பட்டன.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன,பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, தகவல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவி திருமதி சித்ராங்கனி முபாரக் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

– அஸீம் கிலாப்தீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *